யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் வீதிப் புனரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு

(இ.சுதாகரன்)

30 வருட கால யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச மக்களின் நிறைவேறாத நீண்டநாள் பிரச்சினைக்கு மட்டக்களப்பு மாவட்ட இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் மட்டு மாவட்ட அமைப்பாளரும், மாவட்ட தமிழ்ப் பிரதேச செயலகங்களுக்கான அபிவிருத்திக் குழுவின் பிரதித் தலைவருமான கௌரவ பரமசிவம் சந்திரகுமார் அவர்களின் அயராத முயற்சியாலும் கிரான் பிரதேச மக்களின் தேவை கருதி கட்சியின் உயர் மட்ட அமைச்சர்களான கௌரவ பசில் ராஜபக்ஷ மற்றும் கௌரவ ஜோன்சன் பெனான்டோ மற்றும் இராஜாங்க அமைச்சர் கௌரவ நிமால்லன்சா போன்றவர்களுடன் தொடர் பேச்சுவார்த்தை நடாத்தி கிரான் மக்களின் நீண்ட நாள் தேவையான கிரான் பாலம் தொடக்கம் மியான் குளம் பாலம் வரையிலான சுமார் 38km தூரத்தை செப்பனிட அனுமதியைப் பெற்றது.

மாத்திரமல்லாது அதற்கான நிதியும் கௌரவ பரமசிவம் சந்திரகுமார் அவர்களின் சிபாரிசுக்கு அமைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா அப் பிரதேச மக்களால் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.