டிப்பர் வாகன சில்லில் சிக்குண்டு வயோதிபர் பலி

(ரவ்பீக் பாயிஸ்)

திருகோணமலை-கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராறு பகுதியில் டிப்பர் வாகனத்திற்குள் சிக்குண்டு வயோதிபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று (09) மாலை 6.00 மணியளவில்இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ஏ.எச்.சாவுல் ஹமீட் (76 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது; அவரது வீட்டுக்குப் பின்னாலுள்ள காணிக்குள் டிப்பர் வாகனத்தில் மண் ஏற்றி வந்து அதனை பறிக்கும் போது குறித்த இடத்தை காண்பித்துள்ளார் இதேவேளை டிப்பர் பின்புறமாக வந்தபோது கால் டிப்பர் வாகன சில்லில் சிக்கி கீழே விழுந்து டிப்பர் வாகனத்தின் டயருக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையன் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதுடன் இறந்தவரின் சடலம் தற்போது கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை கந்தளாய் போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.