பல்கலை கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா

(ஹஸ்பர்)

கிண்ணியா வலயக்கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட, முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரியில் 2019/2020 சித்தி பெற்று பல்கலை கழகத்துக்கு தெரிவான 19 மாணவ ,மாணவிகளுக்கான கௌரவிப்பும் நினைவு சின்னம் வழங்கும் நிகழ்வு நேற்று
( 8)பாடசாலை அதிபர் அஸ்கீன் மஹ்ரூப் தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளர் ஏ. நசூகர்கான்,கலந்து சிறப்பித்தார்.

இதில் உதவி பணிப்பாளர் மற்றும் பாடசாலை இணைப்பாளர் எம் .ஹசன் கல்வி நிர்வாக பிரதி பணிப்பாளர் ஏ .சீ .நஸார் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எம். எஸ் .எம் .நஸார் மற்றும் பாடசாலை அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.