சீன வெளிவிவகார அமைச்சர் பங்கேற்பில் துறைமுக நகரில் இன்று திறக்கப்பட்ட இரு பகுதிகள்

கொழும்பு துறைமுக நகரில் நிர்மாணிக்கப்பட்ட பொது நடைபாதை மற்றும் இலகுரக படகு முற்றம் இன்று (09) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீயின் பங்கேற்பில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நிறைவை நினைவு கூரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று திறந்து வைக்கப்பட்ட நடைபாதை நாளை (10) முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.

அதன்படி, நாளை (10) முதல் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை குறித்த பகுதியை பொதுமக்கள் பயன்படுத்த முடியும்.

ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் அமைந்துள்ள நுழைவின் ஊடாக பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் குறித்த பகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.