வலத்தாமலை பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மரணம் தொடர்பில் சந்தேகம்

(ரவ்பீக் பாயிஸ்)

திருகோணமலை புல்மோட்டை வலத்தாமலை பிரதேசத்தில் சேற்றில் புதையுண்ட நிலையில் நேற்றைய தினம் சடலமொன்று மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக நேற்று (08) திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்தது

இவ்வாறு அனுப்பப்பட்ட குறித்த சடலம் இன்றையதினம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் விசேட வைத்திய நிபுணர் நெரியெல்ல அவர்களினால் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு புல்மோட்டை போலீஸ் அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது

இதன் போது குறித்த மரணம் மின்சாரம் தாக்கியதாலும் சேற்றில் புதையுண்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டு குறித்த மரணம் இடம்பெற்றுள்ளதாக விசேட வைத்திய நிபுணரினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பொலிசாரினால் மரணமடைந்தவர் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு மரணமடைந்தனர் போலீசர் தாக்கியதினாலே குறித்த நபர் உயிரிழந்து இருக்கின்றனர் என குடும்பத்தினர் முரண்பட்டதுடன் வைத்தியசாலையிலிருந்து குறித்த சடலத்தை உறவினர்கள் பெற மறுத்துள்ளனர்

இதன்போது வைத்தியசாலை வளாகத்தினுள் அமைதியின்மை ஏற்பட்டதுடன் குறித்த மரணத்தின் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட வைத்தியர் பக்கச்சார்பாக நடந்து கொண்டதாகவும் தமக்கு குறித்த சடலத்தின் இரண்டாவது முறை பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இவ் மரணத்திற்கு நீதியை பெற்றுத் தருமாறும் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்திருந்தார்

பொலிசாரினால் துரத்திச் செல்லப்பட்ட குறித்த நபர் பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்திருக்கலாம் எனவும் குறித்த நான்கு போலீசார் அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறும் குடும்பத்தினர் இதன்போது கூச்சலிட்டனர்

மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;

குறித்த நபருக்கு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தாகவும் பொலிசார் கைது செய்வதற்கு வீட்டுக்கு வந்ததாகவும் இதேவேளை அவர் தப்பி ஓடியதாகவும் இவ்வாறு மரணமடைந்தவரின் மனைவி தெரிவித்தார்.

இதனையடுத்து நானும் கணவரும் பஸ்ஸில் திரியாய் நோக்கி பயணித்து கொண்டிருக்கும் போது யான் ஓயா பாலத்தை அண்மித்த பகுதியில் பஸ்ஸை இடைமறித்த குச்சவெளி பொலிசார் தனது கணவரை கைது செய்ய முற்பட்டதாகவும் இதனையடுத்து கணவர் தப்பி ஓடியதாகவும் ஓடிய கணவரை மூன்று பொலிசார் துரத்தி சென்ன்றதாகவும் உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்தார்.

மீண்டும் துரத்திச்சென்ற மூன்று பொலீஸ் உத்தியோகத்தரில் இருவர் மாத்திரம் திரும்பி வந்து தன்னை பொலிஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்று திரியாய் சந்தியில் வைத்தியசாலைக்கு அருகில் தனியாக இறக்கிவிட்டு நாளை கணவர் வீட்டுக்கு வருவார் என பொலிசார் கூறியதாகவும், இருப்பினும் மறுநாள் தனது கணவன் வீடு திரும்பவில்லையெனவும் கணவனின் மரண செய்திதான் தனது காதில் எட்டியதாகவும் தனது கணவரை பொலிஸார் துரத்தி சென்று பொலிசாரின் தாக்குதலினாலே அவர் உயிரிழந்திருக்கலாம் எனவும் உயிரிழந்தவரின் மணைவி குற்றம் சுமத்துகின்றார்.

மேலும் எனது கணவன் குற்றவாளியாகவே இருந்தாலும் நீதி மன்றத்தினால் அவரை அழைத்து வருவதட்கான பிடியாணை மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதகவும் அவரை அடித்து கொலை செய்ய பொலிஸ் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்க படவில்லை எனவும் கணவரின் மரணத்தில் சந்தேகம் ஏட்பட்டுள்ளதகவும் தமக்கு நியாயமான நீதியினை பெற்றுத்தருமாறும் உயிரிழந்தவரின் மனைவி உரிய அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்தார்.

குறித்த மரணம் தொடர்பில் புல்மோட்டை பொலிசார் தீவிர விசாரணைகளை மேட்கொண்டுவருவதுடன் மரணமடைந்தவரின் உடலை உறவினர்கள் பெற மருத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.