வலைப்பந்து மைதானம் அமைத்துத் தருமாறு மகஜர்

(எச்.எம்.எம்.பர்ஸான்)

வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவிகளின் புறக்கிருத்திய விளையாட்டு செயற்பாடுகளை கருத்தில் கொண்டு பாடசாலையில் வலைப்பந்து மைதானம் ஒன்றினை அமைத்துத் தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபை உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீட்டிலிருந்து குறித்த பாடசாலைக்கு மைதானத்தை அமைத்துத் தருமாறு அப் பகுதி பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.எம்.தையூப்பிடம் பாடசாலை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்து மகஜர் கையளிக்கப்பட்டது.

மகஜர் கையளிக்கும் நிகழ்வில் பாடசாலை அதிபர் எம்.ரீ.எம்.பரீட், பிரதி அதிபர் எம்.யூ.எம்.முகைதீன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எம்.சி.எம்.முனவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாடசாலையில் மைதானம் அமையப் பெறவுள்ள இடத்தை பிரதேச சபை உறுப்பினர் பார்வையிட்டதுடன், மைதானத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் பாடசாலை நிர்வாகத்திடம் உறுதியளித்துள்ளார்.