திருமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விளாங்குளம் காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் உள்நாட்டு உற்பத்தி துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை சர்தாபுற விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இவ்வாறு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியினை மீட்டுள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட துப்பாக்கியினை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.