நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுகின்றது திருமலை எண்ணெய் குதங்கள் குறித்த ஒப்பந்தம்

திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் கைச்சாத்திடப்பட்டுள்ள புதிய ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதி குறித்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அதற்கு முன்னர் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்திலும் ஒப்பந்தம் முன்வைக்கப்படவுள்ளது.

திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கைக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. தொழிற்சங்கங்கள் போராட்டத்துக்கு தயாராகிவருகின்றன.

அதேபோல இது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள அமைச்சரவை தீர்மானத்தை இரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்திலும் அடிப்படை உரிமை மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையிலேயே குறித்த ஒப்பந்தம் அமைச்சரவையிலும், நாடாளுமன்றத்திலும் முன்வைக்கப்படவுள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.