நாளையும் நாளை மறுதினமும் மின்சார தடை

(தலவாக்கலை பி.கேதீஸ்)

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (8) சனிக்கிழமை நாளை மறுதினம் (9) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 8 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் நுவரெலியா கிளை அறிவித்துள்ளது.

அந்தவகையில் லிந்துலை வைத்தியசாலை, லிந்துலை நகரம், லெமிலியர் தோட்டம், மட்டுக்கலை தோட்டம்,சென் கூம்ஸ், பாமஸ்டன் தோட்டம், கல்கந்தவத்தை தோட்டம், சமர்செட் பங்களா,சமர்செட் தோட்டம், லேங்டல் தோட்டம், வங்கிஓயா தோட்டம்,ரதெல்ல தோட்டம், ரதெல்ல கிளப், உடரதெல்ல, உடரதெல்ல இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஆகிய பகுதிகளில் மின்சார தடை ஏற்படும் என நுவரெலியா மின்சார சபை அறிவித்துள்ளது.