சர்ச்சைக்குரிய உரக் கப்பலுக்கு நிதி செலுத்திய மக்கள் வங்கி

stack of one hundred dollars notes on dollars background

சர்ச்சையை ஏற்படுத்திய உரத்தை இலங்கைக்கு கொண்டு வந்த சீன நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் அமெரிக்க டொலரை மக்கள் வங்கி செலுத்தியுள்ளது.

சற்று முன்னர் இந்த தொகை செலுத்தப்பட்டதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய கரிம உரங்களை இலங்கைக்கு அனுப்பிய சீன நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு மக்கள் வங்கி தீர்மானித்திருந்தது.

சீனாவை தளமாகக் கொண்ட Qingdao Seawin Biotech Group Co., Ltd க்கு கடன் கடிதம் செலுத்துவதைத் தடுக்கும் தடை உத்தரவை கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றம் நீக்கியதை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 03 அன்று, சர்ச்சைக்குரிய கரிம உர ஏற்றுமதியை ஏற்றுக்கொள்ளாத போதிலும், புதிய தரப்படுத்தப்பட்ட உரத்தை அனுப்புவதற்கான தீர்வுக்கு அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொண்டதால், தடை உத்தரவு நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், சீன நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் அமெரிக்க டொலரை மக்கள் வங்கி சற்று முன்னர் செலுத்தியுள்ளது.