செலான் வங்கியினால் முச்சக்கர வண்டிகளுக்கு கொவிட் பாதுகாப்பு திரை கவசங்கள்

பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் முச்சக்கர வண்டிகளுக்கு கொவிட் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான பிஸாஸ்டிக் பாதுகாப்பு திரை கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

செலான் வங்கியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூகநலன் சார்ந்த செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் கொரோனா நோய்தொற்றில் இருந்த பொதுமக்களையும், பாடசாலை மாணவர்களையும் பாதுகாக்கும் வகையில் முன்னாயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முதல் தொகுதியாக 100 முச்சக்கரவண்டிகளுக்கு இவ் பாதுகாப்பு கவசங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

செலான் வங்கியின் கிழக்குப் பிராந்திய முகாமையாளர் ரிஸ்ணி உஸைன் தலைமையில் மட்டக்களப்பு செலான் வங்கியில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு செலான் வங்கி முகாமையாளர் பிறேமணி மோகன்ராஜ் , பிராந்திய செலான் வங்கி செயல்பாட்டு மேலாளர் பத்மசிறி இளங்கோ, மட்டக்களப்பு செலான் வங்கி உதவி முகாமையாளர் ஜெ . ஜெயமேனன் உட்பட வங்கி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.