இன்றும் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மின்தடை ஏற்படும்

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இன்றைய தினமும் (07) இடைக்கிடையில் மின்தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்தில் உள்ள ஜெனரேட்டர் ஒன்று பழுதடைந்துள்ளதாலும் மற்றும் அதிக மின்சார தேவையினாலும் இவ்வாறு மின்தடை ஏற்படக்கூடும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நேற்றிரவு கொழும்பு உட்பட பல பகுதிகளில் மின்சார விநியோகம் பல தடவைகள் தடைப்பட்டது.

களனிதிஸ்ஸ அனல்மின்நிலையத்தில் உள்ள ஜெனரேட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இரவு 9.30 மணியளவில் மின்சாரம் வழமைக்குத் திரும்பியதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் அமைப்பு செயற்பாடுகளை தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.