அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 65

சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரித்து சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்ற சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிக்கும் யோசனை பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

அதன்படி, ஓய்வூதிய சட்டத்தை திருத்துவதற்கான 2021.12.30 திகதியிட்ட அமைச்சரவை ப​த்திரத்திற்கு 03.01.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

இம்மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.