காரைதீவு பிரதேசத்தில் மொழி கொள்கைகளை உறுதிப்படுத்துவதற்கான நிதி வழங்கும் நிகழ்வு !

(நூருல் ஹுதா உமர்)

அச்சங்கங்கள் ஊடாக மொழி கொள்கைகளை உறுதிப்படுத்துவதற்கான சில செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான நிதி வழங்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் காரைதீவு பிரதேச செயலக கூட்டமண்டபத்தில் இடம்பெற்றது .

மனித அபிவிருத்தி ஸ்தாபனம் பொது நிருவாக அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய மொழிகள் சமத்துவ மேன்பாட்டு செயற்திட்டத்தின் ஊடாக அரச மொழி கொள்கைகளை உறுதிப்படுத்துதல் ஊடாக சமுக ஒற்றுமைப்பாட்டினை செயல்படுத்துதல் தொடர்பான செயற்பாடுகளை தெரிவு செய்யப்பட்ட சக வாழ்வு சங்கம்கள் ஊடாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிகழ்விற்கு அம்பாரை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன், காரைதீவு உதவி பிரதேச செயலாளர் எஸ். பாத்தீபன், மனித அபிவிருத்தி ஸ்தாபன பணிப்பாளர் கலாநிதி பி.பி.சிவப்பிரகாசம், உதவி கல்வி பணிப்பாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான வீ ரி.சகாதேவராஜா உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.