ஆட்டோவில் ஆடுகள் திருடிய நால்வர் சிக்கினர்

(எச்.எம்.எம்.பர்ஸான்)

ஆட்டோ ஒன்றில் இரண்டு ஆடுகளை திருடிய நால்வர் பொது மக்களின் உதவியுடன் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலை நகர் பகுதியில் புதன்கிழமை (5) ஆம் திகதி ஆட்டோ ஒன்றில் வந்த நால்வர் அங்கு மேய்ந்து திரிந்த இரண்டு ஆடுகளை திருடிச் சென்றுள்ளனர்.

ஆடுகளை திருடிய நபர்களை சி.சி.ரி.வி. கமெராவின் உதவியுடன் கண்டு கொண்ட பிரதேச மக்கள் அவர்களை பிடித்து வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த பகுதியில் தொடர்ச்சியாக ஆடுகள் திருடப்பட்டு வருவதாக ஆடுகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.