ஓட்டமாவடியில் மனித முகம் போன்று காட்சியளிக்கும் சிலந்தி

(எச்.எம்.எம்.பர்ஸான்)

மனித முகம் போன்று காட்சியளிக்கும் சிலந்தி ஒன்றை வீட்டு உரிமையாளர்கள் கண்டுள்ளனர்.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை ஹிஸ்புல்லாஹ் வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலே இந்த சிலந்தியை வீட்டு உரிமையாளர்கள் நேற்றிரவு கண்டுள்ளனர்.

வித்தியாசமாக முறையில் வீட்டின் சுவரில் திரிந்த சிலந்தியை வீட்டு உரிமையாளர்கள் பார்த்த போது அதில் மனித முகம் போன்று காட்சியளித்துள்ளது.

இவ்வாறு தமது வீட்டுக்குள் வந்த அபூர்வ சிலந்தி சிறிது நேரத்தின் பின்னர் அவ்விடத்தை விட்டு சென்றுள்ளதாகவும் வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.