ஷில்பா அபிமானி – மாகாண கைவினைப் போட்டி.

(பைஷல் இஸ்மாயில்)தேசிய கைவினைப் பேரவையினால் நடாத்தப்பட்ட கிழக்கு மாகாணத்திலுள்ள கைவினைஞர்களுக்கான ஷில்பா அபிமானி மாகாண கைவினைப் போட்டி 2021 மாகாண மற்றும் தேசிய மட்டப் போட்டியில் பல்வேறு வகையான தயாரிப்புகளை வழங்கியவர்களுக்குள் தெரிவு செய்யப்பட்ட  கைவினைஞர்களுக்கான கௌரவிப்பும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (05)  கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி கவிதா உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் திருமதி ஆர்.யூ.ஏ.ஜெலீல், முதலமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ், தேசிய கைவினைப் பேரவையின் தலைவர் சம்பத் எரஹபொல உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதன்போது ஷில்பா அபிமானி மாகாண கைவினைப் போட்டி 2021 இற்கான மாகாண மற்றும் தேசிய மட்டப் போட்டியில் பல்வேறு வகையான தயாரிப்புகளை வழங்கி தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ்களை கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி கவிதா உதயகுமார், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் திருமதி ஆர்.யூ.ஏ.ஜெலீல், முதலமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ், தேசிய கைவினைப் பேரவையின் தலைவர் சம்பத் எரஹபொல ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டது.