எரிவாயு பிரச்சினை: கிராமங்களில் மரங்கள் வெட்டப்படுகினறன;  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்

எரிவாயு பிரச்சினை இன்னும் பல மாதங்களுக்கு நீடித்தால், எரிவாயுவுக்குப் பதிலாக விறகுகளைப் பயன்படுத்துவோரின் சதவீதம் அதிகரித்து வருவதால் கிராமப்புறங்களில் இருக்கும் காடுகள் அழியும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டு கின்றனர்.

சமையல் எரிவாயு விலை உயர்வு, சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு, எரிவாயு கசிவால் ஏற்படும் வெடிப்பு ஆபத்துகள் போன்ற காரணங்களால் கிராமப்புறங்களில் உள்ள மக்களின் விறகுப் பயன்பாடு அதிகரித்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

மேலும், விறகுகளைக் கண்டுபிடிப்பதற்காக மக்கள் காடுகளுக்குள் நுழைவதால், மரங்கள் மற்றும் கொடிகளின் சேதம் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

சமையல் எரிவாயு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால், அதனால் ஏற்படும் நடவடிக்கை களின் பாதகமான விளைவுகளை எதிர்காலத்தில் காண முடியும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.