அரசிலிருந்து சு.கவை உடனடியாக வெளியேற்றுங்கள்; திலும் அமுனுகம வலியுறுத்து!

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.”

இவ்வாறு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:

”அரசுக்குள்ளும், அமைச்சரவையிலும் ஒழுக்கம் இருக்க வேண்டும். கூட்டுப் பொறுப்பு பாதுகாக்கப்பட வேண்டும். அவ்வாறு முடியாவிட்டால் வெளியேற்றுவதற்கு முன்னர் வெளியேறுவதே நல்லது.

இந்த அரசின் வெற்றியின் பிரதான பங்காளி சுதந்திரக் கட்சி அல்ல. அப்பம் சாப்பிட்டுவிட்டு துரோகம் இழைத்தவர்களே அங்குள்ளனர். எந்நேரத்தில் வேண்டுமானாலும் அக்கட்சியினர் துரோகம் இழைக்கலாம். எனவே, பாய்ந்து செல்வதற்கு முன்னர் வெளியேற்றுவதே நல்லது” என்றார்.