சமூகம் சார்ந்த உட்படுத்தலுடன் கூடிய அபிவிருத்தி மற்றும் சுகாதார குழுவின் மாகாண மட்ட கலந்துரையாடல்.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு சமூகம் சார்ந்த உட்படுத்தலுடன் கூடிய அபிவிருத்தி மற்றும் சுகாதார குழுவின் மாகாண மட்ட கலந்துரையாடல்  மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே.கருணாகரனின் தலைமையில் 2 நாள் பயிற்சி நெறியாக கிறீன் காடன் கோட்டலில் இன்று (5,6) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தங்காலையை தலைமையாகக் கொண்ட நவஜீவன நிறுவனம் மாற்றுத்திறனாளிகளுக்கான  பல்வேறு செயற்றிட்டங்களை கடந்த 2019 இல் இருந்து மேற்கொண்டு வருகின்றது. இந்நிறுவனத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான திட்டமிடல் தொடர்பான கலந்துரையாடலே இதன்போது மேற்கொள்ளப்படவுள்ளது.
இக்கலந்துரையாடலில் மாவட்ட மட்டத்தில் செயற்படும் சமூகசேவை உத்தியோகத்தர், ஊடகவியலாளர், திறன் விருத்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்,  விதாத அபிவிருத்த உத்தியோகத்தர், கலாசார அபிவிருத்த உத்தியோகத்தர், விளையாட்டு அபிவிருத்த உத்தியோகத்தர்,  உளவளத்துணை உத்தியோகத்தர், புள்ளிவிபரவியலாளர், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர், மற்றும் முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர்,  உட்பட இந்நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர் ஆகியோர் கரலந்து கொண்டனர்.