மின்சாரம் தாக்கி பறி போன உயிர்கள்.

 
(எச்.எம்.எம்.பர்ஸான்) மின்சாரம் தாக்கி இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ள சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் மேய்ந்து திரிந்த இரண்டு மாடுகளே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.
கடும் மழை பெய்து கொண்டிருந்த போது சம்பவம் நடந்த இடத்தில் அமைந்திருந்த மின்கம்பத்தில் இருந்து வந்த மின்சாரம் தாக்கியதில் இரண்டு மாடுகளும் உயிரிழந்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக வருகை தந்த இலங்கை மின்சார சபை வாழைச்சேனை பிராந்திய ஊழியர்கள் மின் இணைப்பை சீர் செய்து மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.