சுசிலின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிக்கப்படுகின்றது?

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்கால நடவடிக்கை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பீட கூட்டத்தின் போது தீர்மானிக்கப்படவுள்ளதாக தககல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக எடுக்கப்படவுள்ள ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து அரசியல் பீட கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அரசியல் பீட கூட்டத்தின் திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது கட்சி உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டால், அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் பதவியை இழந்த சுசில் பிரேமஜயந்த, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.