‘ஆசியாவின் ராணி’யினை விற்பனை செய்ய இறுதி முடிவு எடுக்கவில்லை

அண்மையில் கண்டறியப்பட்ட உலகின் மிகப்பெரிய நீல மாணிக்ககல்லான ‘ஆசியாவின் ராணி’க்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ள டுபாயை தளமாகக் கொண்ட நிறுவனத்துடன் இறுதி ஒப்பந்தம் செய்வது குறித்து இலங்கை இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தற்போது டுபாயில் இருக்கும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, ‘ஆசியாவின் ராணி’யை விற்பனை செய்வது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் 100 அமெரிக்க டொலருக்கும் அதிகமான சலுகைக்காக அதிகாரிகளும் நீல மாணிக்ககல்லின் உரிமையாளரும் நிறுவனமொன்றுடன் இன்னும் கலந்துரையாடல் கட்டத்திலேயே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் குறித்த நீல மாணிக்ககல்லினை இன்னும் அதிக விலைக்கு ஏலம் விடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இதற்கு முன்னர், பல உள்ளூர் வர்த்தகர்கள் இந்த நீல மாணிக்ககல்லிற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளதாக உரிமையாளர் சமில சுரங்க பன்னிலாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மாணிக்ககல்லினை,விஞ்ஞானி ஒருவர் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் மதிப்பிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.