நாட்டின் சில பகுதிகளில் மீண்டும் திடீர் மின்தடை

மீண்டும் ஒரு முறை நாட்டில் மின்சார துண்டிப்பு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபையினால் இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது.

டீசல் கிடைக்காமையால் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளதாக குறித்த சபை குறிப்பிட்டுள்ளது.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நேற்றைய இரண்டாவது தடவையாக மூடப்பட்ட போதும், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் தற்போது பயன்படுத்தப்படுகின்றது.

எவ்வாறாயினும், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை கொண்டு வந்த கப்பலின் எரிபொருளை தரையிறக்குவதற்கான நாணய கடிதத்தை பெறுவதில் டொலர் நெருக்கடி காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாகவே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.