திருமலை விவசாயிகள் உரம் கோரி வீதியில் இறங்கினர் : இவர்களுடன் கைகோர்த்தார் எதிர்க்கட்சித் தலைவர்

ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை கப்பல்துறை விளாங்குளம் விவசாயிகள் உரம் கோரி வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்

நேற்று (05) திருகோணமலை கண்டி பிரதான வீதி விளாங்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவும் இணைத்து கொண்டார்

குறித்த ஆர்ப்பாட்டத்தில் தமக்கான உரத்தினை உரிய நேரத்தில் வழங்குமாறும்,கேசும் இல்லை உறவும் இல்லை, முடியுமென்றால் ஆட்சி செய்யுங்கள் இல்லாவிட்டால் விலகுங்கள் என்ற கோஷங்களை எழுப்பியவாறு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்

இணைந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் விவசாயிகளின் விளைச்சல் நிலங்களை பார்வையிட்டதுடன் அரசாங்கத்தினால் புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட திரவ உரம் தொடர்பிலும் கேள்வி எழுப்பினார் அதற்கு விவசாயி ஒருவர் அந்த உரம் இடும் நாளில் தனது மனைவியுடன் அணுகுவது கூட இல்லை என கேளிக்கையாக பதிலளித்தார்

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்….

ஆண்டாண்டு காலமாக இரசாயன உரத்தினை பயன்படுத்தி பயிர் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு தற்போதைய அரசாங்கம் திடீரென ஒரே தடவையில் இரசாயன உரத்தினை தடை செய்திருந்தது

தற்போதைய அரசாங்கம் தெரிவித்திருந்தது விவசாய அமைச்சும்  தெரிவித்திருந்தது இரசாயன உரத்துக்கு பதிலாக சேதனப் பசளை பயன்படுத்துமாறும் அவ்வாறு பயன்படுத்தும்போது நீங்கள் பெற்ற அறுவடைக்கு மேலாக கூடுதல் இலாபத்தைப் பெறமுடியுமென தெரிவித்திருந்தது

ஆனால் தற்போது நடந்தது?  என்ன இங்கு காணப்படுகின்ற வயல் வெளியை பார்த்தாலே புரிகிறது என்ன நடந்திருக்கின்றது என்பது

இந்த அரசாங்கத்தின் முட்டாள்தனமான செயற்பாடுகள் முட்டாள் தனமாக எடுக்கப்பட்ட முடிவுகள் தனிப்பட்டவர்களின் யோசனைளினால் எடுக்கப்பட்ட முடிவுகள் நாட்டில் உள்ள அனைத்து விவசாய நிலங்களும் நாசம் அடைந்துள்ளது

சாதாரண மக்கள் போன்று  நீ நிவாரணத்திட்க்கு மேல் நிவாரணம் கேட்கும் கூட்டம் அல்ல இந்த விவசாயிகள் அவர்களின் குறைந்தபட்ச வேண்டுகோளாக இருந்தது நியாயமான விலையில் நிவாரண விலையில் உரத்தினை பெற்றுக்கொள்வது இவ்வாறு தமது வாழ்வாதாரத்தினை மிகவும் கஷ்டத்துடன் கொண்டு சென்ற விவசாயிகளுக்கு இருந்ததும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது

இவ்வாறு விவசாயிகள் இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது யார்?தற்போதைய அரசாங்கம்

இந்த அரசாங்கம் விவசாயிகளை இல்லாமலாக்கி புதிது புதிதாக உரங்களை இறக்குமதி செய்து,இரசாயனங்களை இறக்குமதி செய்து,பாவனைக்கு உதவாத உரங்களை இறக்குமதி செய்து அவ்வாறு இறக்குமதி செய்ய முற்பட்ட ஒரு உர நிறுவனத்தின் கேள்விகளுக்கு பயந்துகொண்டு அவ்வாறான நிறுவனத்துக்கு முந்திக்கொண்டு  நஷ்ட ஈடும் வழங்கியது வழங்கிய நஷ்ட ஈடு இலங்கை ரூபாவில் அல்ல டோலர் மில்லியன் கணக்கில் நஷ்ட ஈடும் வழங்கியுள்ளது

ஆனால் எமது விவசாயிகள் உரம் கேட்கும்போது ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு விலை ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விலை உரம் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரத்திற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றது சில பிரதேசங்களில் 30 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகின்றது இது மாபெரும் பாவமான செயல் இது அரசியல் அல்ல இது ஒரு சாபம் உண்மையில் சொல்லப்போனால் எமது நாட்டு விவசாயிகள் பாரிய துன்பத்தில் உள்ளார்கள் எனவே அரசாங்கம் இதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுத்து நமது நாட்டின் விவசாயத்தினை பாதுகாக்குமாறும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்

இவ் ஆர்ப்பாட்டத்தில் விளங்குளம் பிரதேச விவசாயிகள்,பிரதேச வாசிகள் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.