இராசமாணிக்கம் அமைப்பின் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

க.ருத்திரன்.
மட்டக்களப்பு இராசமாணிக்கம் அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பாடசாலையில் தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி  தரம்5 மாதிரிப் பரீட்சை வினாத்தாள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.கல்குடா கல்வி வலயத்தில் உள்ள 76 ஆரம்ப பாடசலைகளுக்கும் இவ் பரீட்சை வழிகாட்டி முன்மாதிரி வினாத்தாள்கள் வழங்கி வைக்க்பட்டது. இம்மாதம் நடுப் பகுதியில் இப் பரீட்சை நடைபெறவுள்ளது.
இவ் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா,சாணக்கியன் கலந்து கொண்டு இவற்றின வழங்கி வைத்தார்.இதன்போது பிரதி வலயக் கல்விப் பணிப்பாளர்களான திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன்,றிஸ்மியா பாணு ,உதவிக் கல்விப்ணிப்பாளர் கே.யோகராசா மற்றும் வலய ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். தமது பதவிக்காலத்தில் தாம் சார்ந்த தமிழ் சமூகத்திற்கு ஏதாவது முன்னேற்றகரமான விடயங்கள் நடக்க வேண்டும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தமது உரையின் போது தெரிவித்தார்.