ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவத்தில் சந்தேகத்தில் கைதான நான்கு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

பாறுக் ஷிஹான்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை  பள்ளி ஒழுங்கை  வீதியைச் சேர்ந்த 42 வயதுடைய  நான்கு பிள்ளைகளின் தந்தையான சாலி முஹமது நளீம் என்ற சந்தேக நபரே செவ்வாய்க்கிழமை (04) மாலை  உயிரிந்துள்ளதாக பொலிஸாா் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனா்.

உயிரிழந்துள்ள சந்தேகநபர்  மௌலவி சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பில் இருந்ததாக கூறி 2019.05.22 திகதி அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில்  தங்காலை சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்தார்.இதன் போது குறித்த சந்தேக நபருக்கு  நோய் நிலைமை ஏற்பட்டதை தொடர்ந்து  கடந்த நவம்பா் மாதம் 23ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தார்.

அதன்  பின்னா் மேலதிக சிகிச்சைக்காக டிசம்பா் மாதம் 5 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தங்கி சிகிச்சைப்பெற்று வந்துள்ளாா்.

இவ்வாறு சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பொரளை பொலிஸாா்  கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனா்.

தற்போது உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக  வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

2019  ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவ தேவாலயங்கள் இ நட்சத்திர விடுதிகளில் தற்கொலை தாக்குதல் இடம்பெற்ற பின்னர் 2019 ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியில் வொலிவேரியன் கிராமத்தில்     இடம்பெற்ற இரு பிரதான குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு  என்பன அன்று இரவு  நடந்தேறியது.

பின்னர் ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோரை தேடி முப்படையினரும்  பொலிஸாரும் சந்தேகத்தின் அடிப்படையில் பலரை கiது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.