ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்பட்ட சுசிலுடன் பிரதமர் பேச்சு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் பிரதமர் தம்மை தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாற்றியதாக சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில், சுசில் பிரேமஜயந்த பதவி நீக்கம் செய்யப்பட்டதாக நேற்று மாலை முறைப்படி எழுத்து மூலம் அவருக்கு அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.