கல்விக்கு கைகொடுப்போம் நிகழ்ச்சித்திட்டம்.

(காரைதீவு  நிருபர் சகா)மாணவர்களின் மகிழ்ச்சிகரமான கற்றலுக்கு  உதவுதலை நோக்காக கொண்டு சமூக சேவை பிரிவினால் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை  பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.எம்.முகம்மது ஹனிபா தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் வேதநாயகம்  ஜெகதீசன் கலந்து கொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், உதவி பிரதேச செயலாளர் யு.எம். அஸ்லம்,  கணக்காளர் ஜ.எம்.பாரீஸ், சமூகசேவை உத்தியோகத்தர் மற்றும் விடயத்துக்கு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனா்.