கடந்த வருடம் மாவட்ட செயலகத்தில் சிறந்த பணியை புரிந்த அனைத்து திணைக்களங்களுக்கும் அரச அதிபர் பாராட்டு

( வாஸ் கூஞ்ஞ)

பலதரப்பட்ட பிரச்சனைகளுக்கு மத்தியிலும் கடந்த வருடம்  மன்னார் மாவட்ட செயலக செயற்பாடுகள் இங்கு கடமைபுரியும் ஒவ்வொருவரினதும் அர்ப்பணிப்பு மக்களுக்கு உகந்த சேவையாக இருந்தமை அனைத்து மாவட்ட செயலக அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் என மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்ரான்லி டீமெல் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த வருடம் மன்னார் மாவட்டம் பலதரப்பட்ட இக்கட்டனான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் மன்னார் மாவட்ட செயலக அனைத்து துறைசார் திணைக்கள அதிகாரிகள் உத்தியோகத்தாகள் தங்கள் பணிகளை செய்து மக்களுக்கு சிறந்த சேவைகளை ஆற்றியுள்ளனர் இதற்காக யாவருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன் என மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்ரான்லி டீமெல் இவ்வாறு தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை மன்னார் மாவட்ட செயலகம் ஆரமப்பிக்கப்பட்ட தினமாகிய திங்கள் கிழமை (03.01.2022) அன்று இடம்பெற்ற நிகழ்வின்போது மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்ரான்லி டீமெல் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

இவ் நடப்பு வருடமாகிய 2022 ஆம் ஆண்டில் கடமைச் செயற்பாடுகளின் ஆரம்ப நிகழ்வில் எம்முடன் கலந்து சிறப்பிக்கின்ற மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் எமக்கு இக்காலக்கட்டத்தில் சுகாதார நடைமுறைகளை தொடர்ந்து எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என தெளிவுபடுத்திதியுள்ளார் அவருக்கு இவ்வேளையில் நன்றி தெரிவித்து நிற்கின்றேன்.

கடந்த வருடம் பல்வேறு சூழ்நிலைகளின் மத்தியில் குறிப்பாக கொரோ தொற்றினால் எமது அலுவலகத்துக்கு ஒரே நேரத்தில் ஊழியர்கள் வந்து கடமை செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட நிலையிலேயே நாம் செயல்பட்டோம்.

அந்த நேரத்தில் கொரோனா தொற்று நோய் ஒருபுறம், பயண தடைகள் மறுபுறம் வியாபார ஸ்தாபனங்கள் மூடப்பட்டிருந்தமையினால் மக்கள் அவதி இத்துடன் கடும் மழையால் பெரும் வெள்ள பெருக்கு இவற்றின் மத்தியிலும் எமது மாவட்ட மக்களை பட்டினி சாவுக்கு நாம் இட்டுச் செல்லாது நாம் அந்த நேரத்தில் மக்களுக்கு எதை செய்ய வேண்டுமோ அதை திருப்திகரமாக செயல்படுவதற்காக எமது இந்த மாவட்ட அலுவலகம் தீவிரமாக செயல்பட்டது.

அத்தியாவசிய சேவைகளை கிராமங்கள்தோறும் மேற்கொள்ளப்பட்டதுடன் கொரோனாவினால் பாதிப்படைந்தவர்களுக்கு அனர்த்த முகாமைத்துவத்துடன் இணைந்து செயல்பட்டு இவ்வாறு இங்கு இடம்பெற்ற அனைத்து அனர்த்தங்கள் மத்தியில் இவ் மாவட்ட செயலகம் தனது பணியை திருப்திகரமாக செயல்பட்டது.

இதற்கு இவ் மாவட்ட செயலக துறைசார் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் சகலரும் சுழற்சி முறையில் வருகை தந்து எங்களுடன் இணைந்து செயல்பட்டனர். இதற்காக நான் சகலருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.

கடந்த வருடம் எமக்கு ஒதுக்கப்பட்ட நிதி யாவற்றையும் பல சவால்களுக்கு மத்தியிலும் நாம் தகுந்த முறையில் உரிய காலத்தில் செலவு செய்து அபிவிருத்தியை முன்னெடுத்துள்ளோம்.

எமது சமூர்த்தி திணைக்களம் எமது மாவட்டத்துக்கு கிடைக்க வேண்டிய அனைத்து நிதியையும் பெற்று செயல்பட்டுள்ளது. இவ்வாறு எமது மாவட்ட செயலக பிரதம கணக்காளர் வருட இறுதிக்கான கணக்கினை முடிவுறுத்தி சாதனையையும் நிலைநாட்டியுள்ளார்.

இவ்வாறு எமது மன்னார் மாவட்ட செயலக அனைத்து திணைக்கள அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் சிறந்த முறையில் தங்கள் பணிகளை செய்து எமக்கு நல்ல பெயரை ஈட்டித் தந்துள்ளனர்.

குறிப்பாக வருட கணக்கு முடிவுறுத்தும் இறுதி நாளில் எமது மாவட்ட அபிவிருத்திக்கென 20 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த வேளையில் எமது பொறியியலாளர் தீவிரமாக செயல்பட்டு அவ் நிதி திரும்பாவண்ணம் செயல்பட்டமைக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்த நிற்கின்றேன் என இவ்வாறு அரச அதிபர் தெரிவித்தார்.