ஆலையடிவேம்பில் வெள்ளப்பெருக்கில் அள்ளுண்டு செல்லப்பட்ட விவசாயின் சடலம் மீட்க்கப்பட்டது

வி.சுகிர்தகுமார் 
  ஆலையடிவேம்பு பட்டிமேடு வடக்கு பள்ளப்பாமங்கை துரிசில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அள்ளுண்டு செல்லப்பட்ட விவசாயின் சடலம் இன்று புளியம்பத்தை கிராமத்தின் முன்பகுதியில் உள்ள நரகக்குழி என அழைக்கப்படும் ஆற்றின் நடுப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

இவ்வாறு மீட்க்கப்பட்ட சடலமானது அதிக மழைவீழ்ச்சி காரணமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பட்டிமேடு வடக்கு பள்ளப்பாமங்கை துரிசில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நேற்று அள்ளுண்டு செல்லப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டது.

சடலமாக மீட்க்கப்பட்டவர் புளியம்பத்தை கிராமத்தை சேர்ந்த 57 வயதுடைய கணபதிப்பிள்ளை கிருபைராஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆற்றின் நடுப்பகுதியில் சடலமொன்று காணப்படுவதாக மீனவர் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்கு சென்ற உறவினர்கள் அதிகாரிகளின் அனுமதியின் பிரகாரம் தோணியின் மூலமாக சடலத்தை ஆற்றின் கரையோரமாக கரைசேர்த்தனர்.

நேற்யை தினம் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவரை அக்கரைப்பற்று பொலிசார் மற்றும் இராணுவத்தினர் பிரதேச செயலகத்தின் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டிருந்;த நிலையிலேயே இன்று சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த துரிசில் வெள்ளப்பெருக்கு அதிகரித்த நிலையில் வெள்ள நீரை வெளியேற்ற துரிசில் பலகையினை கழற்ற முற்பட்ட சந்தர்ப்பத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் கiசேர்க்கப்பட்ட இடத்திற்கு சென்ற அக்கரைப்பற்று பொலிசார் மற்றும் பிரதேச செயலகத்தின் கிராம உத்தியோகத்தர்கள் சென்று விசாரணைகளை ஆரம்பித்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இதேநேரம் அம்பாரை மாவட்டத்தில் தொடரும்; அடை மழையினால் மாவட்டத்தின் பல்வேறு தாழ் நிலப்பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.