உதவும் கரங்கள் நிலையத்தில் ஆங்கில புதுவருட நிகழ்வு

 

மட்டக்களப்பு மயிலம்பாவெளியிலுள்ள உதவும் கரங்கள் சிறுவர் இல்லத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற வழிதேடும் சிறுவர்கள் சுமார் 75 பேர் இணைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு, உடை, கற்றல் உபகரணங்கள் என்பன தியாக சிந்தையும் தாராளமனமும் கருணை உள்ளமும் படைத்த நல்லுள்ளங்களின் உதவியால் இலவசமாக வழங்கப்பட்டது.

அதனிலும் மேலாக கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தமிழ், சிங்களம், யோகாபயிற்சி, நடனப்பயிற்சி, கணினிப்பயிற்சி போன்ற பாடங்கள் திட்டமிடப்பட்டு தேர்ச்சி மிக்க வளவாளர்களால் வினைத்திறனுடன் நடாத்தப்பட்டு வருவதுடன், இங்கு உள்ள உற்பதித்திறன் முயற்சி மையத்தில் 15 பெண் தலைமைதாங்கும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட படித்த யுவதிகளும் பணியாற்றுகின்றனர்;.
உதவும் கரங்கள் நிலையத்தில் அதன் தலைவர் திரு.ச.ஜெயராஜா (விரிவுரையாளர், மட்டக்களப்பு தேசிய கல்விக்கலலூரி) தலைமையில் 2022.01.01 ஆங்கில புதுவருடமன்று காலை 10.00 மணிக்கு உதவும் கரங்கள் நிலையத்தில் உள்ள சிறார்களுக்கும் பணியாளர்களுக்கும் கற்றல் உபகரணங்கள், உடைகளும், பரிசுப்பொருட்களும், கலந்து கொண்ட அனைவருக்கும் புதுவருட கைவிசேடம் போன்றனவும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருமதி.லாவண்யா செந்தீபன்ஏறாவூர்ப்பற்று விவசாய விரிவாக்கல் போதனாசிரியர் பிரதம அதிதியாகவும் ஏறாவூர் பற்று கோட்டக்கல்விப்பணிப்பளர் திரு.த.ராஜமோகன், பான்ஏசியா வங்கி முகாமையாளர் ஏ.முகுந்தன் ஆகியோரும் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.