புளுகுணாவை, கங்காணியார் குளங்களின் வான்கதவுகள் திறப்பு : மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் 

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும்   அடை மழை காரணமாக குளங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளமையால் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.
மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட புளுகுணாவை குளத்தின் நீர் மட்டம் 34அடிக்கு உயர்ந்துள்ளமையால் குளத்தின் வான்கதவுகள் நான்கு 2அடிக்கும், கங்காணியார் குளத்தின் நான்கு கதவுகளும் 1அடிக்கும் திறந்துவிடப்பட்டுள்ளன. மேலும் உன்னிச்சை குளத்தின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
தாழ்நிலப்பகுதிகளிலும், வெள்ளநீர் நிரம்பி காணப்படுவதுடன்,  வீதிகளிலும் நீர் ஓடுவதினால் போக்குவரத்து செய்வதிலும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மழை பெய்து வருவதினால் தாழ் நிலப்பகுதியில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.