சஜித் பிரேமதாச திருக்கோணேஸ்வரர் கோவிலில் வழிபாடு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச செவ்வாய்க்கிழமை 04.01.2022 காலை திருகோணமலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க திருக் கோணேஸ்வரம் கோவிலுக்குச் சென்று வழிபாடுகளில் கலந்து கொண்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டார்.
எதிர்க்கட்சித் தலைவரின் எண்ணக்கருவில் அமைந்த‘‘ பிரபஞ்சம் ‘‘நிகழ்ச்சித்திட்டம் திருகோணமலை மாவட்டத்தை மையப்படுத்தி இடம் பெற்று வரும் அதேநேரம் , கோணேஸ்வரர் கோவிலில் வழிபாடும் அமைந்திருந்தது.

இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்,ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் திருமலை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளிலும் நாளை 6 ஆம் திகதி வரை கலந்து கொள்ளவுள்ளார்.