அடைமழையால் ஆபத்தான நிலையில் மக்கள்.

 

(எருவில் துசி) மட்டக்களப்பு, அம்பாரை மாவட்டங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மக்கள் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

அந்தவகையில்  களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவில் பல தாழ்நிலப் பிரதேசங்கள் மழை நீரினால் மூழ்கி வெள்ளமாக காணப்படுகின்றது வெள்ள நீரை அகற்றும் பணியில் தவிசாளர் ஞா.யோகநாதன் அவர்களின் பணிப்புரையின் பேரில் பல வட்டாரங்களில் வட்டரா பிரதிநிதிகளின் மேற்பார்வையுடன் சபையின் JCB இயந்திரம் மூலம் நீரை வெளியேற்றும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. பிரதேச செயலாளரின் ஆலேசனையுடன் கிராமிய அனர்த்த பாதுகாப்பு குழு மற்றும் கிராம சேவையாளர்களும் இணைந்து நீரை வெளியேற்றுவதற்கான பணிகளை மேற்கொள்வதும்; குறிப்பிடத்தக்கது.