புதிய வருடத்தில் 2ஆம் திகதி மன்னாரில் 2 கொரோனா தொற்றாளர்களும் ஒருவரின் மரணமும் இடம்பெற்றுள்ளது.

வாஸ் கூஞ்ஞ) 

புதிய வருடத்தில் மன்னார் மாவட்டத்தில் முதலாம் திகதி 36 அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோதும் எவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. ஆனால் இரண்டாம் திகதி இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதுடன் ஒரு மரணமும் உறுதி செய்யப்பட்டதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் நாளாந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

புதிய வருடத்தில் இரண்டாம் திகதி 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணத்தையும் தழுவியுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் நாளாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பொது வைத்தியசாலையிலும் முருங்கன் வைத்தியசாலையிலுமே தலா ஒருவர் இவ் கொரோனா தொற்றாளராக இனம் காணப்பட்டவர்களாவர்.

இந்த புதிய வருடத்தில் 2 ஆம் திகதி வரை 2 பேர் கொரோனா தொற்றாளர்களாகவும் ஒருவர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரைக்கும் மன்னார் மாவட்டத்தில் 3185 கொரோனா தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் கொரோனாவினால் 36 மரணங்களும் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.