ஆலையடிவேம்பில் வெள்ளப்பெருக்கில் அள்ளுண்டுசெல்லப்பட்ட விவசாயி ஒருவர் காணாமல் போயுள்ளார்

வி.சுகிர்தகுமார்

அதிக மழைவீழ்ச்சி காரணமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்டபட்டிமேடு வடக்கு பள்ளப்பாமங்கை துரிசில்; ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அள்ளுண்டுசெல்லப்பட்ட விவசாயி ஒருவர் காணாமல் போயுள்ளார். காணாமல் போனவர் புளியம்பத்தை கிராமத்தை சேர்ந்த 56 வயதுடையகணபதிப்பிள்ளை கிருபைராஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த துரிசில் வெள்ளப்பெருக்கு அதிகரித்த நிலையில் வெள்ள நீரைவெளியேற்ற துரிசில் பலகையினை கழற்ற முற்பட்ட சந்தர்ப்பத்தில் இச்சம்பவம்நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அக்கரைப்பற்று பொலிசார் மற்றும் பிரதேசசெயலகத்தின் கிராம உத்தியோகத்தர்கள் சென்று நிலைமையினை பார்வையிட்டதுடன் இராணுவம்மற்றும் பொலிசாருடன் பலர் இணைந்து காணாமல் போனவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேநேரம் அம்பாரை மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழையினால்மாவட்டத்தின் பல்வேறு தாழ் நிலப்பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில்,கல்முனை, நிந்தவுர், அம்பாரை, உள்ளிட்ட பிரதேசங்களிலேயே இவ்வாறு அடைமழைபெய்து வருகின்றது.  அம்பாரை பிரதான வீதிஇ கல்முனை பிரதான வீதி உள்ளிட்ட பல வீதிகளும் வெள்ளத்தால்மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தைப்பகுதியில் சில வியாபாரநிலையங்களிலும் வெள்ள நீர் உட் புகுந்துள்ளது.

இந்நிலையில் மக்களின் அன்றாட நடவடிக்கைளும் மாணவர்களின் கல்விநடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று ஆரம்பித்த மழை வீழ்ச்சி இன்று காலை வரை நீடித்து வரும் நிலையில்தொடர்ந்தும் மழை நீடிக்குமேயானால் ஆலையடிவேம்பு பிரதேசத்திற்குட்பட்ட தாழ்நிலப்பிரதேசங்களில் வாழும் மக்கள் இடம் பெயரக்கூடிய வாய்ப்புக்கள்உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.