புதுவருடத்தை முன்னிட்டு கொறுக்காய் மரக்கன்றுகள் வழங்கினார் மட்டு அரச அதிபர்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
சிறிய அளவிலான பயிர்ச்செய்கை ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பில் கொறுக்காய் மற்றும் மிளகு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
ஏற்றுமதி விவசாய திணைக்களத்தினால் சிறிய அளவிலான பயிர்ச்செய்கை ஊக்குவிப்பபுத் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புதுவருடத்தை முன்னிட்டு 750 மிளகுக் கன்டுகளும், 350 கொறுக்காய் மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டிற்கான கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் முதல்நாளாகிய இன்று அரசஉத்தியோகத்தர்கள் அரசசேவை உறுதியுரை, சத்தியபிரமாணம் செய்துகொள்ட நிகழ்வின்போது மாவட்ட அரசாங்க அதிபர் க. கருணாகரனினால் இம்மரக்கண்றுகள் உத்தியோகத்தர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
ஏற்றுமதி வவிசாயத் திணைக்களத்தின் விவரிவாக்கல் உத்தியோகத்தர் நர்தனா குகதாசனின் ஏறட்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட விவசாய மேற்பார்வை உத்தியோகத்தர் சீ. தனிநாயகம், அபிவிருத்தி உத்தியோகத்தர் கேமசந்திரிகா உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதுதவிர இம்மாவட்ட விவசாயிகளுக்கு இரத்தினபுரி மற்றும் கண்டி மாவட்டங்களில் உருவாக்கப்பட்ட கொறுக்காய் மரக்கன்றுகள் ஒருவருக்கு 10 என்ற அடிப்படையில் 1500 மரக்கன்றுகள் முதல் தடவையாக பரீட்சாத்தமாக பயிரிட வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.