கிருஸ்ண பக்திக்கழக இலங்கைக் கிளை பாண்டிருப்பில் திறப்பு.

( வி.ரி.சகாதேவராஜா) கிருஸ்ண பக்திக்கழகத்தின் இலங்கைக்கான கிளை திறப்புவிழா கல்முனையையடுத்துள்ள பாண்டிருப்பில் ஞாயிறன்று(2) நடைபெற்றது.
அகில உலக கிருஸ்ணபக்திக்கழக ஸ்தாபக ஆச்சரியார் தெய்வத்திரு வேதாந்த சுவாமி பிரபுபாதரின் பிரதிநிதியாக இந்தியாவிலிருந்துவருகைதந்த தெய்வத்திரு மைத்ரி தாஸ் பிரபுவின் முன்னிலையில் திறப்புவிழா நடைபெற்றது.
பிரதமஅதிதியாக அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்துகொண்டு திறந்துவைத்தார். முன்னதாக கோபூஜை பஜனை பகவத்கீதை உபன்நியாசம் என்பன இடம்பெற்றன. மழைக்குமத்தியிலும் அதிக கிருஸ்ணபக்தர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
கிழகத்தின் பாண்டிருப்புக்கிளைத்தலைவர் வ.புஸ்பராஜா அமைப்பாளர் பி.பி.சிவப்பிரகாசம் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்துசிறப்பித்தனர்.