திருகோணமலை கடற்கரையில் காயமடைந்த நிலையில் கடலாமை ஒன்று மீட்பு

ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை கடற்கரையில் காயமடைந்த நிலையில் கடலாமை ஒன்று மீட்க்கப்பட்டுள்ளதாக வன விலங்கு அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

நேற்று (02) இவ்வாறு காயமடைந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பின்னால் கடற்கரையில் இவ்வாறு காயங்களுடன் கடலாமை ஒதுங்கியதாகவும் மீனவர்கள் வழங்கிய தகவலுக்கமைய திருகோணமலை வன விலங்கு அதிகார சபையின் அதிகாரிகளினால் குறித்த கடலாமை மீட்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதுடன்
திருகோணமலை துறைமுக கடல் பரப்பில் குறித்த கடலாமை மீண்டும் கடலுக்குள் அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.