கிழக்குமாகாண 2021ம் ஆண்டுக்கான நாடகம் நாட்டுக்கூத்துக்கான இலக்கிய விருதினைப் பெற்ற அண்ணாவியார் மூ.அருளம்பலம்

கிழக்குமாகாண 2021ம் ஆண்டுக்கான நாடகம் நாட்டுக்கூத்துக்கான இலக்கிய விருதினைப் பெற்ற அண்ணாவியார் மூ.அருளம்பலம் (ஆரையூர் அருள்)அவர்களின் ‘தமிழ் கூத்தியல்’ தென் மோடிக்கூத்துப் புத்தகம், கிழக்குமாகாணத்திலே தென்மோடிக்கூத்துக்கான முதலாவது புத்தகம் என்பதனால் பெருமை கொள்ளுகின்றது என்பதனை எவரும் மறுக்கவோ மறுதலிக்கவோ முடியாது.

1962இல் சு.வித்தியானத்தனால் வெளியிடபட்ட “அலங்காரரூபன்”,வி.சி.கந்தையா அவர்களால் 1996இல் வெளியிட்ட”அனுவுருத்திரன்” ஆகிய தென்மோடிக் கூத்துப் புத்தகங்கள் கிழக்கிலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இ ருந்து கூத்துக் கொப்பிகளிலிருந்து தொகுத்தெடுக்கபட்டு பதிப்பாசிரியர்களான இவர்களால் வெளியிடப்பட்டவைகள் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.

ஈழத்தின் முதல் தென்மோடிக்கூத்துப்பனுவலான இலக்கிய விருதினைப்பெற்ற “தமிழ் கூத்தியல்” எனும் நூலுக்கு சாம்பசிவ சிவாச்சாரியார் அவர்கள் ஆசியுரை வழங்கியிருந்தார்.