திருவாசகம் முற்றோதலை பாடி ஆரம்பித்துவைத்த அம்பாரைமாவட்ட பதில் அரச அதிபர்

எஸ்.சபேசன்

புத்தாண்டினை முன்னிட்டு பெரியநீலாவணை ஆலயடி சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபையின் ஒழுங்கமைப்பில் ஓய்வு நிலை  உதவிக்கல்விப்பணிப்பாளர் கணவரதராஜன் அவர்களின் ஏற்பாட்டில் கல்முனைப் பிராந்திய சிவசங்கரி திருமுறை ஓதுவார் சங்கத்தினால்  திருவாசகம் முற்றோதல் நிகழ்வு ஆலயத்தவைர் ஏ.விமல்ராஜ் தலைமையில் 31 ஆம்திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்து சிறப்பித்ததுடன் பதில் அரச அதிபரினால் முதல் பாடல் பாடப்பட்டு ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்து.மற்று தொழில்நுட்ப உத்தியோத்தர் சமூகசேவகர் எஸ்.சிறிரங்கன் கலந்து சிறப்பித்தார்