(கமல்)
எமது தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் இரண்டு சிந்தனைகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது பணிகளை முன்னெடுத்து வருகின்றார். அப்பணிகளில் அவர் உறுதியாக இருக்கின்றார் என முனனாள் மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தன் அவர்கள் தெரிவித்தார்.
எனவே இன்று எமது இனத்தினை எடுத்துக் கொண்டால் அரசியல் இன்றியமையாததான்றாக அமைந்துள்ளது. ஆனால் இன்று கூறுவர்கள் எல்லா இடங்களிலும் அரசியல் பேசமுடியாதென்று நாங்கள் இதனால்தான் பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். சமூகம்சார்ந்த எந்த விடயததை எடுத்துக் கொண்டாலும் அரசியல் தேவையாக இருக்கின்றது சுருக்கமாக கூறப்போனால் பிறப்பில் இருந்து இறக்கும் வரை அரசியல் தேவை எனவே அரசியல் இன்றி எதனையும் எமது சமூகத்திற்கு செய்துவிட முடியாது சமூகம் அதனை பெற்றவிடவும் முடியாது. எனவேதான் அரசியில் எம்முடன் பின்னிப்பிணைந்தள்ளது எனவே எமது இளந்தலைமுறையினராகிய நீங்கள் இந்த சமூகத்திற்கு உண்மையாகவும் நேர்மையாகவும் சேவையாற்ற வேண்டும் என்று நீங்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். சிறந்த அரசியல் தலைவர்கள் உருவாகுவதன் ஊடாவே எமது சமூகமும் நிறந்து விளங்கும் என்பதனை நிங்கள் மறந்துவிடக் கூடாது எனவே எதிர் காலத்தில் இளந் தலைமுறையினர் அரசியலில் முன்வரவேண்டும் நீங்கள் அரசியலில் இருந்து பின்செல்ல செல்ல எமது சமூகமும் பின்னோக்கி செல்லும் நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தால் எமது சமூகமும் தூங்கிக் கொண்டுதான் இருக்கும் என்பதனை நீங்கள் மறந்துவிடக் கூடாது என அவர் இதன் போது தெரிவித்தார்