மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சிறார்களுடன் ஒளிவிழா கொண்டாடப்பட்டது

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  சிறுவர்களுடன் ஒளிவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இயேசு கிறுஸ்துவின் பிறப்பினை சிறப்புக்கும் வகையில் மாவட்ட செயலக ஒளிவிழா அரசாங்க அதிபர் க. கருணாகரன் தலைமையில் இன்று (29) மாவட்ட செயலகத்தில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்ட அன்பிய இயக்குனரும், புனித சதா சகாய மாதா ஆலயத்தின் பங்குத் தந்தையுமாகிய அருட்தந்தை பிரைனர் செலர் கலந்து கொண்டு ஆசிவழங்கினார்.
உன்னதத்தில் தேவமகிமை மண்ணுலகில் மனிதரிடையே சமாதானம்” எனும் தொனிப் பொருளில்தான் கிறிஸ்து பிறப்பு விழா எனக் கொண்டாடப்படுகின்றது.  “ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கவும், ஏழைகளுக்கும் ஒதுக்கப்பட்டவர்களுக்கும் நற்செய்தி அறிவிக்கவே இயேசு வந்தார் என பைபிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இப்பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட தேவையுடைய சிறார்கள் 21 பேருக்கான உலர் உணவுப் பொருட்களும், கற்றல் உபகரணங்களும் அரசாங்க அதிபர் கருணாகரனால் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.
கொவிட் 19 சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி மாவட்ட செயலக கலாசாரப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந், உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர்  உள்ளிட்ட மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.