வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிர்ப்பு.

 

வ‌ட‌க்கு கிழ‌க்கை இணைப்ப‌த‌ற்கு முய‌ற்சி எடுக்கும் த‌மிழ் க‌ட்சிக‌ளையும் முஸ்லிம் காங்கிர‌சையும் க‌ண்டித்து ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியினால் தேசிய‌ ரீதியில் முன்னெடுக்கும் க‌ண்ட‌ன‌ போராட்ட‌த்தின் தொட‌ராக‌ இன்று புத்த‌ள‌த்திலும் போராட்ட‌ம் ந‌டை பெற்ற‌து.

இதில் ‘ர‌வூப் ஹ‌க்கீமே த‌மிழ் கூட்ட‌மைப்புட‌ன் இணைந்து சிங்க‌ள‌ முஸ்லிம் ஒற்றுமையை சிதைக்காதே.’

வ‌ட‌க்கு கிழ‌க்கை இணைத்து த‌மிழ், முஸ்லிம் முர‌ண்பாட்டை உருவாக்காதே.’

‘வ‌ட‌க்கு வேறாக‌வும் கிழ‌க்கு வேறாக‌வும் இருப்ப‌தே த‌மிழ் முஸ்லிம் நிர‌ந்த‌ர‌ ஒற்றுமை.’

என்ற‌ வாச‌க‌ங்க‌ள் இட‌ம்பெற்றிருந்த‌ன‌.

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் கொள்கை ப‌ர‌ப்பு செய‌லாள‌ர் ச‌ப்வான் த‌லைமையில் இந்த‌ ஆர்ப்பாட்ட‌ம் ந‌டை பெற்ற‌தாக‌வும் இத்த‌கைய‌ இணைப்புக்கெதிராக‌ மேலும் ப‌ல‌ மாவ‌ட்ட‌ங்க‌ளிலும் த‌ம‌து க‌ட்சி ஜ‌ன‌நாய‌க‌ ரீதியிலான‌ எதிர்ப்பை தெரிவிக்கும் என‌வும் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் தேசிய‌ த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார்.