பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின்  மீளாய்வுக் கூட்டம்.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மேன்மைதங்கிய ஜனாதிபியின்  எண்ணக்கருவில் உதித்த  சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்துக்கமைய  உருவாக்கப்பட்ட பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயற்பாடுகள்இ முன்னேற்றங்கள் தொடர்பாக  கலந்துரையாடுவதற்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று (29) மாவட்டச் செயலகத்தின் கேட்போர்கூடத்தில்  இடம் பெற்றது.
உதவி மாவட்ட செயலாளர் திரு. எஸ். நவேஸ்வரன் தலைமையில் பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் மாவட்ட உதவி பணிப்பாளர் மேஜர்.கே.பீ கமகே அவர்களின் எற்பாட்டில் இடம்பெற்றது.
இதில் மாவட்டஇ பிரதேச செயலக ரீதியாக இத் திணைக்களத்துக்கு  இனைத்துக்கொள்ளப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தில் 1ம் கட்டமாக 246 பேருக்கு தொழில் வழங்கப்பட்டு அவர்களுக்கான  தொழிற்பயிற்சிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
(NVQ-03) கற்கை நெறியை புர்த்தி செய்தவர்களுக்கான  நிரந்தர  நியமனம் எதிர்வரும் நாட்களிள்  வழங்கப்படவுள்ளது. 2ம் கட்டமாக யானை வேலி பராமரிப்புக்காக 183 பேர் வனஜிவராசிகள் திணைக்களத்திற்கு விசேடமாக முன்னுரிமை  அடிப்படையில்  இணைத்துக்கொள்ளப்பவுள்ளனர்.
வாகரை பிரதேச செயலகத்தில் 34 பேரும் செங்களடி பிரதேச செயலகத்தில் 100பேரும் பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் 23பேரும், வவுனதீவு பிரதேச செயலகத்தில் இருந்து26 பேரும் இணைத்துக்கொள்ளப்பட்டனர், இதற்கும் மேலதிகமாக 887 பேர் உள்வாங்கப்பட்டுள்ளனர் என்பதுடன்  உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் அதற்கான திர்வுகளும் ஆலோசனைகளும்  வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.