தொப்பிகல தொல்லியல்துறையின் இடர்பாடுகளைக் காண அவசர வேலைத்திட்டம்.!

(ஆர். சமிரா)தொல்லியல் துறையும் சுற்றுலாத்துறையும் இணைந்து செயற்பட்டால் நாட்டின் சுற்றுலாத்துறையை மேலும் அபிவிருத்தி செய்ய முடியும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.
சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் மாகாணத்தில் உள்ள தொல்பொருள் இடங்களை மேம்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர்  இன்று (29)தெரிவித்தார்.தொப்பிகல நரகமுல்ல வனப்பகுதியில் தொல்லியல் பெறுமதிகள் தொடர்பில் மாகாண சபையின் விதிகளின் கீழ் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையை கலாசார மற்றும் தேசிய மரபுரிமைகள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் சமர்ப்பித்து உரையாற்றும் போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.
 குறித்த அமைச்சு சமீபத்தில்.
தொப்பிகல வனப்பகுதியில் உள்ள நரகமுல்ல, குடும்பிகல சூலக்காடு, அக்கராயன்குளம், வசிபெந்தகல, முருதத்தனி உள்ளிட்ட ஒன்பது தொல்பொருள் இடங்கள் இந்த அறிக்கையின்படி ஆராயப்பட்டுள்ளன.எவ்வாறாயினும், இந்த தொல்பொருள் இடங்களை பொதுமக்கள் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளை விரைவில் மேற்கொள்ள இணக்கம் காணப்பட்டது. அதனை மேலும் விரைவுபடுத்தும் வகையில் கிழக்கு ஆளுநர் அலுவலகத்திற்கும் கலாசார மற்றும் தேசிய மரபுரிமைகள் இராஜாங்க அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை செய்துகொள்ளவும் இந்த சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி, இம்மாத இறுதிக்குள் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து கொள்ள முன்மொழியப்பட்டது. அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர்,
கடந்த 2 வருடங்களில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பல தொல்பொருள் இடங்களை நான் பார்வையிட்டுள்ளேன். ஒரு விடயத்தை புரிந்துகொள்ளக்கூடியதாகவுள்ளது, இந்த இடங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு  திறக்கப்பட வேண்டும்.அதன் மூலம் சுற்றுலாத் துறை வளர்ச்சி அடையும். மேலும், நமது நாட்டில் தொல்லியல் பாடத்தை ஒரு பாடமாக பாடசாலை  புத்தகங்களில் சேர்க்க வேண்டும்.  2500 வருட வரலாற்றைக் கொண்ட நாடு. மற்ற பெரும்பாலான நாடுகளில் அது இல்லை. எனவே, இந்த தகவலை எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு சேர்ப்பதுஅவசியம்,” என்றார்.
இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, அமைச்சின் செயலாளர் நிஷாந்தி ஜயசிங்க, தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனுதுங்க, மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி ரணசிங்க, பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.