சுனாமி ஏற்படுத்திய வடுக்கள் நினைவாக தேசிய பாதுகாப்பு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
சுனாமி பேரலை ஏற்படுத்திய வடுக்கள் நினைவாக தேசிய பாதுகாப்பு தினம் இன்று  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

சுனாமி போரலை அணர்த்தம் இடம்பெற்ற டிசம்பர் 26 ஆந்திகதி அரசினால் தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக சுனாமியினால் உயிரிழந்த மக்களின் 17 ஆம் ஆண்டு நினைவாக மாவட்ட அணர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது சுனாமி அணர்த்தத்தினால் உயிர்நீத்தவர்கள் நினைவாக ஒளியேற்றி உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட அணர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத், மாவட்ட பொறியிலாளர் ரீ. சுமன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள மாவட்ட கணக்காளர் எஸ். எம் பஸீர், மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் ஆர், சிவனாதன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
இதன்போது மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் கருத்துத் தெரிவிக்கையில், மாவட்ட மட்டத்திலும், பிரதேசமட்டங்கள் மற்றும் கிராம மட்டங்களிலும் இவ்வாறான இயற்கை அணர்த்தங்கள் ஏற்படும் பொழுது மக்களைப் பாதுகாப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் தமது பணிகளை செவ்வனே நிறைவேற்றுவதனூடாக அனர்த்தங்களின்போது ஏற்படும் உயிர் சேதங்களை வெகுவாகக் குறைத்துக் கொள்ளமுடியும்.
இயற்கை அணர்த்தங்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான முன்னறிவித்தல் போன்ற உயிர்காக்கும் பணி உற்பட அனைத்து பணிகளையும் மேற்கொள் அரச உத்தியோகத்தர்கள் அற்பணிப்பபுடன் செயறபடவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
மேலும் இதன்போது 17 ஆண்டுகளுக்கு முன்னர் இம்மாவட்டத்தின் 8 பிரதேச செயலாளர் பிரிவகளிலுள்ள 86 கிராம சேவகர் பிரிவுகளில் உயிர்நீத்த உறவுகள், உடமைகள் இழந்து பாதிக்கப்பட்ட உறவுகள் அனைவருக்கும் இவ்விடத்தில் அஞ்சலியினையும் தெரிவத்தார்.
மாவட்ட அணர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு மாவட்ட மட்டத்திலும், பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பரவலாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.