மக்கள் நலன்நோக்கி நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம்

வாஸ் கூஞ்ஞ) 

எந்தவொரு திணைக்களமோ அல்லது நிறுவனமாக இருந்தாலும் நாம் மக்களுக்காகவே சேவைகளை மேற்கொண்டு வருகின்றோம். அந்தவகையில் பிரஜைகள் குழுவும் மக்கள் நலன்நோக்கியே தனது பணியை முன்னெடுத்து வருகின்றது. இதற்கு நாம் அனைவரும் மக்கள் நலன் நோக்கி ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என வேண்டி நிற்கின்றோம் என மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் பிரஜைகள் குழுவின் அங்கத்தவர்கள் வருட இறுதி ஒன்றுகூடலை புதன்கிழமை (22.12.2021) மன்னார் ஆஹாஸ் ஹொட்டலில் நடாத்தியது. இதில் மன்னார் மாவட்ட சகல திணைக்கள உயர் அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இவ் ஒன்றுகூடல் இடம்பெற்றது

இதன்போது  மன்னார் பிரiகைள் குழுத் தலைவர் அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் இங்கு தனது உரையில் தெரிவிக்கும்போது

இந்த மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகளாக பல்வேறு நிலைகளிலே நாம் தலைமைத்துவம் வகித்து மக்களை முன்னுரிமை படுத்தியவர்களாக இங்கு நாம் ஒன்றுகூடியுள்ளோம்.

நாம் பலதரப்பட்ட பொறுப்புகளில் இருப்பதுக்கு மக்களே காரணமாகும். மக்கள் இல்லையேல் நமக்கு இந்த நிலை இருக்காது.

நாம் செய்யும் ஒவ்வொரு பணியும் மக்களுக்காகவே. பிரiஐகள் குழுவானது மக்களுக்காகவே தங்களை அர்பணித்து சேவைகளை செய்து வருகின்றது

இந்த நிலையில் இவ் குழுவானது அதிகாரிகளுடன் முரண்பட்டாலும் அல்லது ஏற்கமுடியாத தன்மைகள் ஏற்பட்டாலும் இவை யாவும் மக்களுக்காகவேதான் நாங்கள் செயல்படுகின்றோம்.

இங்கிருக்கும் ஒவ்வொரு தலைவர்களும் மக்களுக்காகவே உங்கள் சேவைகளை செய்து வருகிக்றீர்கள் அந்தவகையில் நாங்கள் மக்கள் சார்பகாக உங்களைவ வாழ்த்தி நிற்கின்றோம்.

உங்கள் இந்த சேவையின்போது நீங்கள் பல கஷ்டங்களையும் துன்பங்களையும் எதிர்நோக்குகின்றீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

இதை எமது பிரiஐகள் குழு உணர்ந்து உங்களுக்கு ஒரு நன்றி கடனாக இந்த ஒன்றுகூடுதலை நடாத்துகின்றோம். என்பதையும் மகிழ்வுடன் தெரிவிக்க விரும்புகின்றோம்.

இந்த செயல்பாட்டின் மூலம் நீங்கள் புத்துணர்வு பெற்று தொடர்ந்து மக்களுக்கு சேவைபுரிய வேண்டும் என்ற ஊக்கியாகவும் இது திகழும் என்ற நோக்கில் நாங்கள் இந்த ஒன்றுகூடலை மேற்கொள்ளுகின்றோம்.

தற்பொழுது எமது மக்கள் இன்பத்திலும் துன்பத்திலும் நோய் நொடியிலும் வாழ்ந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம். அவர்களை மறக்காது நாம் தொடர்ந்து அவர்களுக்கு பணி செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

மக்களே எமது இதயம். இவர்களுக்கு பணி செய்வதே எமது நோக்காக இருப்பதால் எமது பணியானது காத்திரமானதாக இருக்க வேண்டும்

இதை உணர்ந்தே நீங்களும் எங்கள் அழைப்பை எற்று இங்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக இருப்பதுடன் உங்கள் வருகையானது எங்களுக்கு மக்களாகவே காணப்படுகின்றீர்கள்.

ஆகவே இந்த பிரiஐகள் குழு மக்களுக்காக தங்கள் சேவையை செய்யும்போது நீங்களும் எமக்கு ஆதரவு தந்து மக்கள் நலன்நோக்கி செயல்பட ஒத்துழைப்பு வழங்கவீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.

அதிகாரிகளாக திகழும் உங்களுக்கு ஊடாகத்தான் நாங்கள் மக்களுக்காக சேவை செய்ய முடியும்

ஆகவே நாம் ஒன்றினைந்த பணியாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

ஆகவே நாம் ஒன்றுபட்டு மக்களுக்கான சேவைகளை செய்வோம் என இந்நேரத்தில் வேண்டி நிற்கின்றோம் என இவ்வாறு தெரிவித்தார்.