ஜோசப்பரராசசிங்கம் துரோகிகளால் வீழ்த்தப்பட்டதுதான் இனத்துக்கான சாபக்கேடு

மட்டக்களப்பு மண்ணில் அன்றைய காலத்தில் ஒவ்வொரு நாட்களையும் கடத்துவதென்பது தமிழ்தேசிய வாதிகளுக்கும் தமிழ்த்தேசியத்தை இறுக்கமான கொள்கையாக கொண்டவர்களுக்கும் மிகக் கடினமானதாகவே இருந்தது.

தலைப்புச் செய்திகள் எல்லாமே படுகொலைகளும் கடத்தல்களும் என நீண்டு கொண்டே சென்றகாலம். மனித குலத்தின் மிகமோசமான பிரிவினவாத சிந்தனைகளில் தமிழினமே சிக்குண்டு நிலைகுலைந்த நேரங்கள்.பல உயிர்கள் காவுகொள்ளப்ப்டது. அந்தநேரத்தில் துணிச்சலோடு தமிழ்தேசியத்தில் பற்றுக்கொண்டு மக்களோடு மக்களாக நின்று களப்பணி செய்தவர்தான் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராசசிங்கம்.

இவரினுடைய ஆளுமை அபாரமானது, அரசியல் தளத்தில் பல முக்கிய நிகழ்வுகளை தமிழ்மக்களுக்கெதிராக நடைபெற்ற அநீதிகளை சர்வதேசம் வரைகொண்டு சென்றவர். குறிப்பாக பல படுகொலை சம்பவங்களை துணிந்துநின்று வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியவர். அந்த காலங்களில் லண்டன்  BBC செய்திகளில்தான் உண்மையான விடயங்கள் வெளிவரும். அதில் ஜோசப் ஐயா அவர்களின் குரல் அடிக்கடி கேக்கக்கூடியதாக இருந்தது.

சர்வதேச இராஜதந்திரிகளை சந்திப்பதும்,நியாயத்தை கோருவதுமென தமிழரகளுக்கெதிரான கொடுமைகளுக்கு நீதி வேண்டி நெடும்பயணம் மேற்கொண்ட மாமனிதர்.

இவரது ஆங்கில புலமை அபாரமானது. எதிரிகளை கூட பேசி இணங்கவைப்பது இவருக்கு இருக்கம் விசேட தகமை ஆனால் துரோகிகளால் வீழ்த்தப்பட்டதுதான் இனத்துக்கான சாபக்கேடு. அதுவும் யேசு பாலன் பிறந்தநாளில் அவரின் சன்னிதியிலே
நடு நிசி நேரம் இரத்தக்கறை படிந்த அந்த கணங்களை எந்த மனிதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மனித குலத்தின் அவமானத்தின் மையப்புள்ளி தேவனின் சன்னிதான இரத்தக்கறைகள்.ஒரு மக்கள் பிரதிநிதியை,மனிதஉரிமை காவலனை
காவுகொண்டதனால் என்ன விடயத்தை சாதித்க முடிந்தது இந்த கும்பலால்
இவரின் இழப்பானது இன்னும் ஈடுசெய்முடியாத பேரிழப்பே .
16 வருடங்கள் ஓடிப்போனது. லட்சியப்பயணங்கள் முடியவில்லை.

கி.சேயோன்
தலைவர்
வாலிபர் முன்னணி
இலங்கைத் தமிழரசு க்கட்சி